loader image

எம் சாண்ட் பயன்படுத்தலாமா?

எம் சாண்ட் என்பது என்ன? ஆற்றுப் படுகையில் மணல் கிடைக்கிறது. ஆற்று மணலைக் கட்டிட வேலைக்குப்  பயன்படுத்துகிறோம். பாறைகளை உடைத்துத் தூளாக்கிப் பெறுவதுதான் எம் சாண்ட். Manufactured Sand என்பதன் சுருக்கம்தான் M-Sand. இயற்கை உருவாக்கித் தருவது ஆற்று மணல், நாமே தயாரிப்பது எம் சாண்ட். தயாரிப்பு முறை பாறைகளை உடைத்து நம் கட்டிட வேலைக்குத்  தேவையான 20 எம்.எம் 40 எம்.எம் என்ற அளவீடுகளில் நமக்குத் தேவையான ஜல்லிகளைப் பெறுகிறோம். அதைப் போன்றே மேலும் உடைத்துத் தூளாக்கி நமக்குத் தேவையான சரியான அளவில் எம் சாண்டைப் பெறலாம். அப்படி உடைத்துப் பெறும்போது, மிக நுண்ணிய அளவிலான துகள்களும் சேர்ந்து...

கட்டுமானம் என்னும் அறிவியல்

இன்றைய சூழலில் கட்டுமானப் பணியில் வடிவமைப்பாளர்,பொறியாளர், மேஸ்திரி ஆகிய மூவர் முக்கியமானவர்கள் இவர்களில் வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் தொழில் சார்ந்த படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலையைச் செய்கிறார்கள்.கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள். கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டுவது என்பது ஓர் அறிவியல் சார்ந்த கலைநுணுக்கமான வேலை. வீடு கட்டும் ஒவ்வொரு படிநிலையிலும் அதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன. உதாரணமாக ஜன்னலின் கீழ் மட்டத்தில் 3 அங்குல  கனத்துக்கு கான்கிரீட் இடப்பட வேண்டும். இது ‘SILL SLAB’ என்று அழைக்கப்படுகிறது. நாளடைவில் ஜன்னலின் கீழ்புறத்தில் 45 டிகிரி கோணத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது. ஜன்னலுக்காக விடப்பட்ட இடைவெளியின் ஓரத்தில் செங்கல் கட்டுவேலையின்  ஒட்டுமொத்த எடை நேரடியாக இறங்குவதால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாங்காமல்  இந்த விரிசல் ஏற்படுகிறது. அந்த அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் SILL...

கட்டுமான வேலைக்கு  பொறியாளர்  அவசியமா

வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர். வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல்,நடைமுறை காரணங்களை ஒரு பொறியாளர்   சரியாகத்  தெரிந்துவைத்திருப்பார் அடிப்படைத் திட்டமிடல் வீடு கட்டத் திட்டமிட்டு வரைபடம் தயாரிப்பதில் இருந்து தொழில்நுட்ப அறிவுள்ள...

கட்டுமான ஒப்பந்தமும்  10 தகவல்களும்

வாடிக்கையாளருக்கும் கட்டுமான ஒப்பந்ததாரருக்கும் இடையில் முறையான  கட்டுமான ஒப்பந்தம் (CONSTRUCTION AGREEMENT) ஏற்படுத்திக் கொள்ளாததால், பல வீட்டுக் கட்டுமானப் பணிகள் சிக்கலாவதுண்டு. உங்கள் நண்பர்களுக்கோ உறவினர்களுக்கோ இப்படி ஒரு இக்கட்டான நிலை ஏற்பட்டதை நீங்கள் பார்த்திருக்கலாம். சட்டவிதிகளை உண்டாக்கி அதனை நெறிப்படுத்த தனித்துறைகளை அமைக்கும் சமூகத்தில் வாழ்ந்து வருகிறோம்.எனவே, வேலைதொடங்கும் முன்பாக இரண்டு தரப்பிலும் ஒப்புக்கொண்ட  தகவல்களை ஒரு பத்திரத்தில் எழுதிக் கையெழுத்திட்டு வைத்துக்கொள்வது இருவருக்குமே மிகவும் நல்லது. கட்டுமான ஒப்பந்தத்தில் கட்டாயம் கீழ்க் கண்ட இந்த 10 விஷயங்களை எழுதிக்கொள்ள வேண்டியது அவசியம். 1. வீட்டு உரிமையாளர், ஒப்பந்ததாரரின் பெயர், தகப்பனார்/கணவர் பெயர், வயது, முகவரி,ஆதார் எண் போன்ற அடிப்படைத் தகவல்கள் 2. நாம் வீடு கட்டப்போகும் இடம் பற்றிய முழு விவரம். 3. கட்டுமான வேலையின் மொத்த மதிப்பு (TOTAL CONTRACT VALUE). எந்தெந்தத் தனிப்பட்ட வேலைக்கு எவ்வளவு என்கிற விவரம். உதாரணத்துக்குச் சதுர அடி முறையில் வேலை என்றால், கூடுதலாக வர வாய்ப்புள்ள தண்ணீர்த் தொட்டி, கழிவுநீர்த் தொட்டி, சுற்றுச்சுவர் உள்ளிட்ட வேலைகள் குறித்த தனிச் செலவுகள் பற்றிய குறிப்புகள். 4.எந்தெந்த வேலை முடிந்த பின் எவ்வளவு சதவீதப் பணம் கொடுக்கப்பட வேண்டும்  (PAYMENT STAGES)...

சமையலறை எப்படி இருக்க வேண்டும்

வடிவமைப்பு வீட்டின் வடிவமைப்பைச்சரிவர முடிவு செய்துவிட்டால் அடுத்தடுத்த வேலைகள் செய்வதற்கு நமக்குத்தனியே ஓர் ஊக்கம் பிறக்கும். நமக்குப்பிடித்ததைப்போல நம் வீடு எப்படி வரப்போகிறது என்கிற சித்திரம் மனத்தில் உருவாகிவிடும். ‘நாம் திட்டமிடவில்லை என்றால் தவறு வதற்குத்திட்டமிடுகிறோம் என்று சொல்கிறது ஓர் ஆங்கிலப்பழமொழி. வீட்டின்ஒவ்வோர்இடத்துக்கும்அடிப்படையிலானமுக்கியத்துவம்உள்ளது. அந்தஅடிப்படையில்ஒவ்வோர்இடமாகஅலசலாம். இந்தவாரம்சமையலறைகுறித்துப்பேசுவோம் சமையலறை ஒரு வீட்டின் மிகமுக்கியமான அறை, சமையலறை. வீட்டில் நெருப்பு ஏற்படுத்தப்படுவது பிரதானமாக இங்கு தான். அங்கத்தினர்கள் அனைவருக்குமான உணவு தயாராவது இங்கு...

குளியலறைஎப்படி இருக்கவேண்டும்

வீட்டின் வடிவமைப்பில் குளியலறை, கழிவறை ஆகிய அறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. கடந்த தலைமுறையினர் குளியலறையுடன் கழிவறை இணைக்கப்படுவதை விரும்பாமல் இருந்தனர். இடமும்நிறைய இருந்தது. ஆகையால் முன்பெல்லாம் வீட்டின் பின்புறம் கழிவறை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வீட்டை அமைப்பதற்கே இடம் குறைவாக இருக்கிறது. அதுவும் பெருநகரங்களின் நிலையைக்கேட்கவே வேண்டாம். அதனால் குளியலறையுடன் சேர்த்தே கழுவறையும் பெரும்பாலும் இன்றும் வடிவமைக்கப்படுகிறது. எந்தக்கோப்பைகள் அமைக்கலாம்? ஒரு குளியலறையில், இந்தியக்கழிவறைக்கோப்பை (INDIAN WATER CLOSET)...