இன்றைய சூழலில் கட்டுமானப் பணியில் வடிவமைப்பாளர்,பொறியாளர், மேஸ்திரி ஆகிய மூவர் முக்கியமானவர்கள் இவர்களில் வடிவமைப்பாளர்களும் பொறியாளர்களும் தொழில் சார்ந்த படிப்பு, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வேலையைச் செய்கிறார்கள்.கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள். கட்டிட மேஸ்திரிகள் தங்கள் தொழில் அனுபவத்தின் அடிப்படையில் வீடு கட்டுகிறார்கள். வீடு கட்டுவது என்பது ஓர் அறிவியல் சார்ந்த கலைநுணுக்கமான வேலை. வீடு கட்டும் ஒவ்வொரு படிநிலையிலும் அதற்கான அறிவியல் காரணங்கள் உள்ளன. உதாரணமாக ஜன்னலின் கீழ் மட்டத்தில் 3 அங்குல கனத்துக்கு கான்கிரீட் இடப்பட வேண்டும். இது ‘SILL SLAB’ என்று அழைக்கப்படுகிறது. நாளடைவில் ஜன்னலின் கீழ்புறத்தில் 45 டிகிரி கோணத்தில் விரிசல் ஏற்படாமல் இருக்க இது உதவுகிறது. ஜன்னலுக்காக விடப்பட்ட இடைவெளியின் ஓரத்தில் செங்கல் கட்டுவேலையின் ஒட்டுமொத்த எடை நேரடியாக இறங்குவதால் ஏற்படக்கூடிய அழுத்தம் தாங்காமல் இந்த விரிசல் ஏற்படுகிறது. அந்த அழுத்தத்தை ஏற்றுக் கொள்ளும் வகையில் SILL...
கட்டுமான வேலைக்கு பொறியாளர் அவசியமா
வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர். வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல்,நடைமுறை காரணங்களை ஒரு பொறியாளர் சரியாகத் தெரிந்துவைத்திருப்பார் அடிப்படைத் திட்டமிடல் வீடு கட்டத் திட்டமிட்டு வரைபடம் தயாரிப்பதில் இருந்து தொழில்நுட்ப அறிவுள்ள...