loader image

கட்டுமான வேலைக்கு  பொறியாளர்  அவசியமா

வீடு கட்டுவதற்கான அடிப்படைத் தேவைகளான பணம் (MONEY), கட்டுமானப் பொருட்கள் (MATERIAL), வேலையாட்கள் (MAN POWER) ஆகியவை குறித்துப் பார்த்தோம். இந்த வாரம் இவற்றை நிர்வகிக்கும் மேலாளர் (MANAGER) குறித்துப் பேசலாம். அந்த மேலாளர்தான், கட்டுமானப் பொறியாளர். வீட்டுக் கட்டுமானம் குறித்த நம் ஆசை, தேவை ஆகியவற்றைத் தீர்த்துவைப்பவர்தான் கட்டுமானப் பொறியாளர். மேலும் நம் பொருளாதாரச் சூழலையும் கவனத்தில் கொண்டு நம் தேவைகளை நிறைவேற்றுவார். வீட்டுக் கட்டுமானத்தின் ஒவ்வொரு நிலையிலும் உள்ள அறிவியல்,நடைமுறை காரணங்களை ஒரு பொறியாளர்   சரியாகத்  தெரிந்துவைத்திருப்பார்

அடிப்படைத் திட்டமிடல்

வீடு கட்டத் திட்டமிட்டு வரைபடம் தயாரிப்பதில் இருந்து தொழில்நுட்ப அறிவுள்ள ஒருவரின் உதவி நமக்கு தேவைப்படுகிறது. அதைத் தொடர்ந்து கம்பி வரைபடம் தயாரிப்பது வீட்டின் வெளிப்புறத் தோற்றத்தை முடிவு செய்வது உள்ளிட்ட ஆரம்ப  கட்டபணிகளிலேயே நம் வீடு ஏட்டளவில் முழு வடிவம் பெற்றுவிடுகிறது.ஆனால் இந்த அடிப்படை விஷயங்களை முழுமையாகத் தயார்செய்யாமல் பிறகு வருத்தப்படுபவர்கள் பலர் இருக்கிறார்கள். இந்த வழிகாட்டுதலை ஆரம்பத்தில் இருந்தே நாம் பெற வேண்டியது முக்கியம். பெரும்பாலானோர் தங்களின் பொருளாதாரப் பலம் குறித்த முழுமையான தெளிவின்றி வீடு கட்டத் தொடங்கிவிட்டுப் பிறகு வருத்தப்படுகிறார்கள். அந்தத் தெளிவை நாம் வீடு கட்ட ஆரம்பிக்கும் முன்பு இந்த அடிப்படைப் படம் தயாரித்தலிலேயே அடைய வேண்டும். எவ்வளவு செலவுக்குள் எப்படிப்பட்ட வீடு கட்டப்போகிறோம் என்கிற சரியான  தீர்க்கமான முடிவை நாம் ஆரம்பித்தில் கொண்டிருக்க வேண்டியது முக்கியம்

மண் மற்றும் நீர் பரிசோதனை

மண்ணின் தாங்கும் திறன், நம் நிலத்தில் கிடைத்து நாம் பயன்படுத்தப் போகும் நீரின் தன்மை இவற்றைப் பரிசோதிப்பது மிகவும் அவசியம்.மண்ணின் தன்மையைப் பொறுத்து அதன் தாங்கும் திறன்  மாறுபடும். அதற்கேற்றவாறு நாம் அடிப்படைக் கட்டமைப்பு (FOUNDATION) செய்ய வேண்டும். கெட்டித்தரை, களிமண் பூமி,கடற்கரைக்கு அருகே உள்ள இடம் இப்படி இடத்துக்கு ஏற்றாற்போல கட்டுமான அஸ்திவாரங்கள் மாறுபடும் என்பது நமக்குத் தெரியும். அதற்கு அந்த மண்ணைப் பரிசோதிக்க வேண்டியது அவசியம் என்பதை நாம்  உணர  வேண்டும்.அவ்வாறே நம்முடைய ஆழ்துளைக் கிணற்றிலிருந்து கிடைக்கக்கூடிய  நீரில் உள்ள உப்புத்தன்மை, அமிலத்தன்மை ஆகியவற்றைப் பரிசோதித்து அது கட்டுமான வேலைக்கு உகந்ததாக  உள்ளதா என்பதை உணர வேண்டும். 

 

Dream Builders

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *